சாதி ரீதியாக பெண்ணை இழிவாக பேசி பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார்!
சோழவரத்தில் பேக்கரியில் பணிபுரியும் பெண்ணை சாதி ரீதியாக இழிவாக பேசி தாக்கியதில் பெண்ணுக்கு எலும்பு முறிவு நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்.
சோழவரம் அருகே பேக்கரியில் பணிபுரியும் பெண்ணை சாதி ரீதியாக இழிவாக பேசி தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக பேக்கரி உரிமையாளர் மீது காவல் நிலையத்தில் புகார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி சோழவரம் அடுத்த அருமந்தையில் ஜெயபால் ஜெயபால் என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த 10 ஆண்டுகளாக புவனேஸ்வரி ( வயது 54) வேலை பார்த்து வந்துள்ளார்.
கடையின் உரிமையாளர் ஜெயபால் புவனேஸ்வரியை அவ்வப்போது தரக்குறைவாக பேசி வந்துள்ளார். இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகக் கடுமையாக பேசி ஜாதி வாரியாக திட்டியதால் புவனேஸ்வரி எதிர்த்து கேள்வி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர் ஜெயபால் தாக்கியதில் புவனேஸ்வரிக்கு கையில் முறிவு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புவனேஸ்வரி கடையின் உரிமையாளர் தரைகுறைவாக பேசி ஜாதி வாரியாக திட்டியும் என்னை தாக்கியதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.