பொன்னேரியில் பரதநாட்டிய சலங்கை பூஜை..!

பொன்னேரியில் ஓம்காரா நாட்டிய பள்ளியின் 20வது பரதநாட்டிய சலங்கை பூஜை விழா நடைபெற்றது

Update: 2023-11-25 07:15 GMT

பொன்னேரியில் பரத நாட்டியம் பயிற்சி முடித்த மாணவிகளின் சலங்கை பூஜை அரங்கேற்று விழா நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இயங்கி வரும் ஓம்காரா பரதநாட்டிய பள்ளியின் 20.வது பரதநாட்டியம் பயிற்சி முடித்த மாணவிகளின் சலங்கை பூஜை அரங்கேற்ற விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் முதன் முறையாக சலங்கை அணிந்து ஆடியது காண்போரை கண்கவர்ந்தது.

நாட்டிய பள்ளியில் பயின்று வரும் ஏழு மாணவிகள் முதன் முறையாக சலங்கை அணிந்து ராகம், தாளம், சுதியோடு ஆடி காண்போரை வியக்க வைத்தனர். நாட்டிய பள்ளியின் குருவின் பயிற்றுவித்தலில் புஷ்பாஞ்சலி, ஜதீஸ்வரம், அலாரிப்பு, கீர்த்தனை உள்ளிட்ட நாட்டிய உருப்படிகளுடன், இராகமாலிகை, திஸ்ரம், ஆரபி போன்ற ராகங்களோடு ஆதி, ரூபகம், மிஸ்ரபம் உள்ளிட்ட தாளங்களுக்கு ஏற்ப பார்வையாளர்கள் அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் வகையில் சிறப்பாக நாட்டியமாடி சலங்கை பூஜை அரங்கேற்றத்தை பூர்த்தி செய்தனர்.

பரதநாட்டியம் ஆடிய மாணவிகளுக்கு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றவர்கள் பரிசுகளை வழங்கினர். இவ்விழாவில் பரதநாட்டிய பயிற்சி சக ஆசிரியர்கள், பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் நண்பர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


Tags:    

Similar News