உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட வெள்ளி பறிமுதல்!

ஆரம்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து பேருந்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 40லட்சம் மதிப்பிலான 40கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்.

Update: 2024-05-29 07:00 GMT

கும்மிடிப்பூண்டி அருகே போலீசார் வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து பேருந்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 40லட்சம் மதிப்பிலான 40கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தமிழ்நாடு - ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது இந்த வழியாக ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா, பிஹார், குளிக்க மாநிலங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் இன்று சோதனை சாவடி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்தை மடக்கி சோதனையிட்டனர். சோதனையில் பயணிகள் சிலரது பையில் ஏராளமான வெள்ளி பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பேருந்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட சுமார் 40.லட்ச ரூபாய் மதிப்பிலான 40கிலோ வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவற்றை கொண்டு வந்த மசூலிப்பட்டினத்தை சேர்ந்த நாராயணன், கோபி ஆகிய இருவரிடம் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் இருந்து வெள்ளி கட்டிகளில் சாமி சிலைகள், கொலுசு, விளக்கு போன்றவற்றை தயாரித்து சென்னை சௌகார்பேட்டையில் விற்பனைக்காக கொண்டு செல்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News