மூடி கிடக்கும் கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொணடுவர மக்கள் கோரிக்கை!
வடமதுரை ஊராட்சியில் மூடி கிடக்கும் தரை துடைப்பான் தயாரிக்கும் கட்டிடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
பெரியபாளையம் அருகே மூடிக்கிடக்கும் தரை துடைப்பான் தயாரிக்கும் தொழில் கட்டிடத்தை சரிசெய்து மீண்டும் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்த வடமதுரை ஊராட்சியில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கிராமத்தில் உள்ள பெண்கள் சுய தொழில் செய்து கொண்டு வருமானம் ஈட்டிடும் வகையில் கடந்த 2010-2011 நிதியாண்டில் ரூபாய்3.லட்சத்து20 ஆயிரம் மதிப்பீட்டில் தரை துடைப்பான் தயாரிக்கும் கட்டிடம் கட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த பெண்கள் தரை துடைப்பான் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் ஓராண்டு மட்டுமே செயல்பட்டு வந்த இந்த கட்டிடத்தை மூடி கிடக்கின்றது.இந்தக் கட்டிடத்தின் முன்பு அடர்ந்த செடி,கொடிகள் வளர்ந்து கட்டிடத்தின் மேலும் அடர்ந்த செடிகள் வளர்ந்து வருகின்றன.
மேலும் இந்த கட்டிடம் விஷப்பூச்சிகளுக்கு இருப்பிடமாக மாறியதோடு இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து பகுதி பெண்கள் கூறுகையில், கிராமத்தில் உள்ள பெண்கள் முன்னேறும் வகையில் கட்டப்பட்ட தரை துடைப்பான் தயாரிக்கும் கட்டிடத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த காலத்தில் வேலை பார்த்து வந்ததாகவும், அப்படி தயாரிக்கும் தரை துடைப்பான் தயாரித்து அதனை கடைகளிலும், அலுவலகங்களிலும், விற்பனைக்கு எடுத்துச் சென்று கிடைக்கின்ற வருமானத்தில் பெண்கள் விட்டு செலவிற்கு தாங்கள் கையிருப்புக்கு, தாங்கள் குழந்தைகளின் படிப்பு செலவிற்கு யாரையும் எதிர்பார்க்காமல் எப்போதும் போதுமான அளவிற்கு பணம் இருந்து மரியாதைடன் இருந்தோம்.
தற்போது தரை துடைப்பான் விதவிதமாக பல்வேறு தொழிற்சாலைகளில் தயாரித்து வரும் தரை துடைப்பானை மக்கள் வாங்குவதால் தாங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காததால் இந்தத் தொழிலை நிறுத்தப்பட்டதாகவும், இதனால் கட்டிடத்தை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டதாகவும். எனவே மீண்டும் இத்தொழில் புதுப்பித்து வேலை இல்லை பெண்களுக்கு சுய கௌரவத்துடன் வாழ கட்டிடத்தை சரி செய்து ஏதாவது சுய தொழில் செய்ய வேலை உருவாக்கி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.