அனுமதியின்றி செயல்படும் வாரச்சந்தையால் கொரோனா பரவும் அபாயம்.

வடமதுரையில் அனுமதியின்றி செயல்படும் வாரச்சந்தையால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Update: 2021-04-25 07:07 GMT

சமூக இடைவெளியின்றி நடக்கும் வாரசந்தை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிப்பதுடன், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

பெரியபாளையம் அடுத்த வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபம் அருகே, அனுமதியின்றி வாரந்தோறும் காய்கறிச் சந்தை நடைபெற்று வருவது வழக்கம். அதேபோல் இந்த வாரமும் வாரச்சந்தை வழக்கம்போல் நடைபெற்றது. இந்த அனுமதி இல்லாத வாரச்சந்தையில் மக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதுடன் சமூக இடைவெளி, முக கவசம் போன்ற தமிழக அரசின் சட்ட விதிமுறைகள் அனைத்தும் கேள்விக்குறியாக மாறியதால் நோய்த்தொற்றும் வேகமாகப் பரவி வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட காவல் துறையினரும், சுகாதாரத் துறையினரும், ஊராட்சி மன்ற நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News