பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு..! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவை நெருங்கிய நிலையில் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-12-05 06:05 GMT

பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்பட்டுள்ள நீர்.

பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவை நெருங்கிய நிலையில் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் மழையால் நீர்வரத்து அதிகரித்தால் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் பூண்டி ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் ஏற்கனவே கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக நீர் நிரம்பி வந்தது. இந்நிலையில் அண்மையில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாவும் தற்போது மிக்ஜாம் புயல் காரணமாக பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

தற்போது நிலவரப்படி பூண்டி ஏரியில் 2700 மில்லியன் கனஅடி நீர் நிரம்பியுள்ளது. 35 அடி ஆழம் கொண்ட பூண்டி ஏரியின் நீர்மட்டம் தற்போது 33.50 அடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 6000 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் நீர்வரத்து 34 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ள உபரி நீர் வெளியேற்றம் ஒழுங்கு முறை வழிகாட்டுதலின்படி நீர்தேக்கத்திற்கு வரும் நீரை அணையின் பாதுகாப்பு கருதி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 2 மணிக்கு முதல் கட்டமாக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்படுகிறது.

இதனால் கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் கரையோரமாக வசிக்கும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன் பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளி வாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் கிராமமக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தொடர் மழை காரணமாக ஏரிக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீரி திறப்பும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News