பூவலை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்திய ஒருவர் கைது
பூவலை பகுதியில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்திய ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை கிராமத்தில் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு மணல் கடத்துவதாக ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் டிராக்டரில் திருட்டு மணல் இருந்தது தெரியவந்தது. இது குறித்து ஒருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.