வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.. கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜனிடம் கிராம மக்கள் மனு..
ஊத்துக்கோட்டை அருகே வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜனிடம் மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகேயுள்ள இலச்சுவாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது இந்திரா நகர் கிராமம். இந்திரா நகர் பகுதியில் சுமார் 150 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர்.
அவர்களில் சிலருக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை எனக் கூறப்படுிகறது. இந்த நிலையில், தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திராநகர் பகுதி மக்கள் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை மனு அளித்தனர்.
இருப்பினும், பட்டா வழங்குவது தொடர்பாக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், ஊத்துக்கோட்டை வந்த கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜனை இந்திரா நகர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சந்தித்து பேசினர்.
தங்கள் பகுதியில் வசிக்கும் இடத்திற்கு வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை மனுத்துள்ள போதிலும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் ஏடுக்காததால் பட்ட வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் இதுகுறித்து அதிகாரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பின்னர், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.