ரயில் பயணத்தில் நான்கு பேரை கத்தியால் தாக்கி பணம் செல்போன் பறிப்பு!
கும்மிடிப்பூண்டி அருகே 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ரயிலில் பயணித்த நான்கு பயனாளிகளை கத்தியால் தாக்கி பணம் விலை உயர்ந்த செல்போன்களை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பு போலீசார் விசாரணை.
கும்மிடிப்பூண்டி: கடந்த இரவு, கும்மிடிப்பூண்டி அருகே சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி புறநகர் ரயிலில் பயணித்த நான்கு பயணிகளை கத்தியால் குத்தி, அவர்களிடமிருந்து விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் ரொக்க பணத்தை பறித்துச் சென்ற மூன்று மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர் ரயில்வே போலீசார்.
சம்பவ விவரம்:
வழக்கமாக இரவு 10:45 மணிக்கு புறப்படும் ரயில் நேற்று இரவு ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
நள்ளிரவு 12:30 மணியளவில் கவரப்பேட்டை ரயில் நிலையத்தை ரயில் அடைந்தபோது, 25 வயது மதிக்கத்தக்க மூன்று நபர்கள் கொண்ட கும்பல் ரயிலின் நான்காவது பெட்டியில் ஏறியது.
மீஞ்சூரில் உள்ள மருந்தகத்தில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பிய சுண்ணாம்புகுளத்தைச் சேர்ந்த மௌலி (24), சரத் (26), கும்மிடிப்பூண்டி உத்ராபதி (27), இலயராகவன் (22) ஆகிய நான்கு பயணிகளை மிரட்டி அவர்களிடமிருந்து விலை உயர்ந்த செல்போன்கள், ஐந்தாயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் உடமைகளை பறித்துச் சென்றனர்.
எதிர்ப்பு தெரிவித்த நான்கு பேரையும் கத்தியால் குத்திவிட்டு மர்ம கும்பல் தப்பிச் சென்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை:
கத்திக்குத்து காயமடைந்த நான்கு பேரையும் ரயில்வே போலீசார் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்
போலீசார் விசாரணை:
கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்த பாதிக்கப்பட்டவர்களிடம், ரயிலில் வழிப்பறி செய்யும் கும்பலின் புகைப்படங்களை காட்டி விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.
பொன்னேரி, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய மூன்று ரயில் நிலையங்களிலும் இரவு நேர ரயில்களில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் ரயில் பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
தீவிர தேடுதல்:
மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர் ரயில்வே போலீசார். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயணிகளுக்கு வேண்டுகோள்:
இரவு நேர ரயில்களில் பயணிக்கும் போது பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மர்ம நபர்களை பார்த்தால் உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படை அல்லது ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.