இலங்கை தமிழர் முகாமில் அயலக தமிழர் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஆய்வு..!

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் முகாமில் அயலகத் தமிழர் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆய்வு செய்தார்.

Update: 2023-11-06 05:30 GMT

கும்மிடிப்பாண்டி இலங்கை தமிழர் முகாமை ஆய்வு செய்ய வந்த அயலக தமிழர் மறுவாழ்வு ஆணையர்.

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் முகாம் மக்களின் வாழ்வாதாரம் முன்னேற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழகத்தில் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர் முகாம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆலோசனை குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அயலக தமிழர் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் கும்மிடிப்பூண்டியில் நேற்று தெரிவித்தார்.

கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் ஊராட்சியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு அயலக மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் இலங்கை தமிழர் முகாம்களில் உள்ள வீடுகள், குடிநீர், கழிவுநீர் கால்வாய், சாலைகளை பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து அவர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் அங்குள்ள மகளிர் குழுவினரிடம் அவர்களது குழுக்களின் செயல்பாடு, சுழல் நிதி பெற்று அவர்கள் செய்யும் தொழில்களை குறித்து கேட்டவர், மகளிர் குழு கூட்டமைப்பை அவர்கள் ஆரம்பித்து தொழில் முனைவோர்களாக மாற அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசியவர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள இளைஞர்கள் திறன் வளர் பயிற்சி பெற்றால், அவர்களுக்கு வட்டியில்லாத 30சதவீத மான்யத்துடன் 2லட்சம் ரூபாய் வரை கடனுதவி தமிழக அரசு வழங்க உள்ளது என்றும், இதுவரை தமிழக அரசின் திறன் வளர் பயிற்சி முகாமில் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த 397 பேர் பயிற்சி பெற்ற நிலையில் இவர்கள் வங்கி கடன் பெற்று சுய தொழில் செய்து பொருளாதார முன்னேற்றத்தை பெற வேண்டும் என்றார்.

அவ்வாறே அவர் பேசும் போது, தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதர முன்னேற்றத்திற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை குழுவை அமைத்து, மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு நிரந்தர தீர்வு கிடைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார் என்றவர். முகாமில் கியூ பிரிவு போலீஸார். வருவாய் துறையினர் இணைந்து 2 மாதத்திற்கு ஒரு முறை இனி குறை தீர் முகாம் நடைபெறும் என்றும், புதிய வீடுகள் , சாலைகள், கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்படும் என்றனர்.

அப்போது பேசிய இலங்கைத்  தமிழர்கள் முகாமில் கழிவு நீர் மேலாண்மை வசதி. சாலை வசதி, மின்சார வசதி, படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு, இந்தியக் குடியுரிமை, இலங்கை சென்று வர தாமதமின்றி பாஸ்போர்ட் வழங்குவது, வீடுகளுக்கு ஆஸ்பெட்டாஸ் அட்டையால் கூரை அமைப்பதை ‘மாற்றி தரமான வீடு அமைத்து தருவது, சிறு தொழில் விற்பனை சந்தை குறித்தும் கோரிக்கை வைத்தனர்.

அப்போது பேசிய சட்ட வல்லுநர் மனுராஜ் சுந்தரம், வளன், உள்துறை உதவி ஆட்சியர் சித்ரா குறிப்பிடும் போது, படித்த இலங்கை தமிழர்களுக்கு அயலக மறுவாழ்வு ஆணையம் தரும் பரிந்துரை கடிதம் மூலம் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு பெற்று தரப்படும் என்றும், சிறு தொழில் செய்பவர்களுக்கு வெளி சந்தையில் விற்பனை செய்ய ஆலோசனை வழங்கப்படும் என்றும், 1987 ஜூலை 1க்கு முன் பிறந்து மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்கள், வெளியில் வசிப்பவர்களுக்கும், ஜூலை-1, 1987இல் இருந்து 3-டிசம்பர் 2004 வரை பிறந்து, பெற்றோர்களில் ஒருவர் இந்தியராக இருந்தாலும், இந்தியரை திருமணம் செய்பவர்களுக்கும் உரிய ஆவணங்களை பெற உதவி செய்து அவர்களுக்கு இந்திய குடியுரிமை 1955ஆம் ஆண்டின் இந்திய குடியுரிமை சட்டத்தின்படி வழங்கப்படும் என்றனர்.

இந்த நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் மணிசேகர், பெத்திக்குப்பம் ஊராட்சி தலைவர் ஜீவா செல்வம் பங்கேற்றனர்.

Tags:    

Similar News