பூவலை கிராமத்தில் சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு அகற்றம், பொதுமக்கள் வரவேற்பு
பூவாலை கிராமத்தில் சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை வருவாய்த்துறையினர் அகற்றினர். பொதுமக்கள் வரவேற்றனர்.;
கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் சுடுகாட்டுக்கு வழி வேண்டி பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை அகற்றக்கோரி வருவாய்த் துறையினரிடம் பலமுறை மனு அளித்தும் பலன் அழைக்கவில்லை.
இதன் காரணமாக கம்யூனிஸ்ட் கட்சி முயற்சியால் தற்போது இந்த ஆக்கிரமிப்பு இடங்களை ஜேசிபி எந்திரம் மூலம் வருவாய்த்துறையினர் அகற்றினர். இவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.