வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கஞ்சா கடத்திய வாலிபரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-08-17 14:56 GMT

அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கஞ்சா கடத்திய வாலிபரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்; அவரிடம் இருந்து 1.5கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு நபர் சுற்றிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து சோதனை செய்தபோது, இரு சக்கர வாகனத்தில் 1.5 கிலோ கஞ்சா உள்ளே வந்த இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் அண்ணனூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த அப்பு (எ) நரசிம்மன் என்பதும் இவர் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை பொட்டலங்களாக வாங்கி வந்து அய்யப்பக்கம் பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். போலீசார் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News