ஏ.டி.எம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி. வாலிபர் கைது

திருவேற்காட்டில் பொதுமக்கள் தகவல் கொடுத்ததால் ஏ.டி.எம் மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-05-10 06:15 GMT

திருவேற்காடு அடுத்த கோலடி மெயின் ரோட்டில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்மில் பணம் எடுக்க பொதுமக்கள் சென்றபோது ஏ.டி.எம் மையத்தின் கதவு சாத்தப்பட்டு, உள்ளே இருந்து சத்தம் வந்தது. இதையடுத்து பார்த்தபோது உள்ளே இருந்த நபர் ஒருவர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.

இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தபோது திருவேற்காடு, செல்லியம்மன் நகரைச் சேர்ந்த ஜோசப்(22), என்பதும் ஏ.டி.எம் மெஷினை உடைத்து பணத்தை எடுக்க முயற்சி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரை கைது செய்து போலீஸார் அந்த நபர் எதற்காக ஏ.டி.எம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறித்தும்  குடிபோதையில் மெஷினை உடைத்தாரா? அல்லது ஊரடங்கு காரனமாக பணத்தேவைக்காக மிஷினை உடைத்தாரா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News