ஊரடங்கில் கல்லூரியா? பெண் உள்ளிருப்பு போராட்டம்
ஊரடங்கு காலத்தில் கல்லூரி இயங்குவதை கண்டித்து பெண் ஒருவர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் 2 வாரங்களுக்கு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் சென்னை ஆவடி அடுத்த மோரை பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் கொரோனா விதிமுறைகளை மீறி கல்லூரி இயங்குவதை கூறி தேன்மொழி என்ற மாணவி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்லூரி நிர்வாகிகள் மற்றும் ஆவடி காவல் துணை ஆணையர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கூறுகையில், ஊரடங்கு விதிமுறையை மீறி கடந்த 6 நாட்களாக பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும், இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு கடிதம் அளித்துள்ளதாக தெரிவித்த அவர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.