ஜெயா கல்லூரியில் கராத்தே போட்டி.

ஆவடி அருகே ஜெயா கல்லூரியில் கராத்தே போட்டி வெற்றி பெற்றவருக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆவடி நாசர் பரிசு வழங்கினார்.

Update: 2023-09-14 07:45 GMT

திருநின்றவூர் ஜெயா கல்லூரியில் 26.ஆம் ஆண்டு கராத்தே போட்டிகள் வெற்றி பெற்ற மாணவி மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் ஆவடி நாசர் பரிசு வழங்கினார்.

.திருநின்றவூர் ஜெயா கல்லூரியில் 26.ஆம் ஆண்டு கராத்தே போட்டிகள் வெற்றி பெற்ற மாணவி மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் ஆவடி நாசர் பரிசு வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே திருநின்றவூர் உள்ள ஜெயா கல்லூரியில் 26.ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட கராத்தே போட்டிக்கு தொழில்நுட்ப இயக்குனர் விஜயராகவன் தலைமை வகித்தார்.

இந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும், ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான சாமு. நாசர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கம்  மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்துநேஷனல் கோல்ட் மெடல்வாங்கிய மாணவி சவிசாவுக்கு ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில் கராத்தே சங்கத்தின் மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி,சேர்மன் லட்சுமி காந்தன்,திருவள்ளூர் மாவட்ட சங்கத் தலைவர் ராஜா, சங்கத்தின் துணைத் தலைவர் ரவி, ரவிச்சந்திரன், ரமேஷ் குமார், தியாகராஜன் , பொருளாளர் தனசேகரன், மாவட்ட பயிற்சியாளர் தீபக் உட்பட ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர


Tags:    

Similar News