ஆவடி அருகே மூதாட்டியிடம் நகை பறித்து தப்பிச்சென்ற இரண்டு பேர் கைது

ஆவடி அருகே மூதாட்டியிடம் நகை பறித்து தப்பிச்சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2023-01-08 16:47 GMT

ஆவடி அருகே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டிடம் தங்க நகை பறித்து தப்பி சென்ற நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் மாதவன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஆண்டாள். இவரது மகன் திருமணம் ஆகி துபாயில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ஆண்டாள்  வீட்டை பூட்டிவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார் அப்பொழுது மூன்று மர்ம நபர்கள் வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டு வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

அப்போது அங்கு மூதாட்டி ஆண்டாள் உறங்கிக் கொண்டிருந்ததால் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து ஆண்டாள் திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த நந்து  ஆகியோர் தான் மூதாட்டி ஆண்டாளிடம் கத்தி முனையில் நகை பறித்து சென்றவர்கள்  என தெரியவந்தது.இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் திருநின்றவூர் போலீசார் கைது செய்தனர்.  பின்னர் மணிகண்டனையும், நந்துவையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


Tags:    

Similar News