கருணாகரச்சேரி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
கருணாகரச்சேரி அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.;
திருநின்றவூர் பிரகாஷ் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (27) தனியார் நிறுவன ஊழியர், இவர் கடந்த 22ஆம் தேதி பட்டாபிராம் கருணாகரச்சேரி அருகே 400 அடி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது இவர் பின்னால் வந்த இருவர் வெங்கடேசனை கத்தியால் தாக்கி கவரிங் செயின், மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த வெங்கடேசன் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த பட்டாபிராம் போலீசார் இதில் தொடர்புள்ள செங்குன்றத்தை சேர்ந்த ஜெயபாரதி (30), மோகனசுந்தரம் (27) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து கவரிங் செயின், மொபைல் போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.