திருமுல்லைவாயல்: நகைதிருட்டு புகார்-போலீசார் மனைவி நாடகமாடியது அம்பலம்
காவலர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில், காவலர் மனைவியே நாடகமாடியது அம்பலமானது.;
சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் தர்மராஜ். இவர் ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சந்திரலேகா. இவர்களுக்கு மதியழகன் என்ற மகன் உள்ளார். தற்போது சந்திரலேகா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் தர்மராஜ்க்கு, சந்தரலேக்கா தொலைபேசியில் அழைப்பு விடுத்து கொரோனா பரிசோதனைக்காக 2 பேரும் கவச உடையணிந்து வீட்டிற்கு தந்ததாகவும், தனக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு பீரோவில் இருந்து 5 சவரன் தங்க நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்று விட்டதாகவும் கூறினார்.
இதனையடுத்து நேற்று தர்மராஜ் திருமுல்லைவாயில் காவல் நிலைத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தர்மராஜனுடைய மனைவி மீது சந்தேகம் அடைந்து, நடத்திய விசாரணையில், தன்னுடைய ஆண் நண்பர்களிடம் பணமும், நகையும் கொடுத்துள்ளதாகவும், தன்னை யாரும் மயக்க மருந்து கொடுத்து, திருடிச்செல்லவில்லை என்றும் விசாரணையில் காவல்துறையினரிடம் காவலரின் மனைவி ஒப்புக்கொண்டுள்ளார்.
காவலருடைய மனைவியை தன்னுடைய வீட்டில் இருந்து பணம், நகை திருடப்பட்டதாக நாடகமாடியது காவல்துறை வட்டாரத்தில் இன்று பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.