போக்குவரத்துதொமுச நிர்வாகியைக் கண்டித்து போராட்டம்

ஆவடி பேருந்து பணிமனையில் தொமுச இணைச் செயலாளரைக் கண்டித்து ஓட்டுநர், நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-23 09:15 GMT

ஆவடி பேருந்து பணிமனையில் தொமுச இணை செயலாளரைக் கண்டித்து தொமுச ஓட்டுநர், நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவடி பேருந்து பணிமனையில் சாதி ரீதியாக பழி வாங்குவதாக தொமுச இணை செயலாளர் மீது தொமுச ஓட்டுநர்,நடத்துனர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பேருந்து பணிமனையிலிருந்து சென்னை மற்றும் புறநகர் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு 600கும் மேற்பட்ட ஓட்டுநர்கள்,நடத்துனர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

குறிப்பாக திமுகவின் தொ.மு.ச வில் 200 ஓட்டுநர்கள்,நடத்துனர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.இந்த நிலையில் ஆவடி பணிமனை தொமுச இணை செயலாளர் ராஜ்குமார் மற்றும் கிளை மேலாளர் யுவராஜ் ஆகியோர் உறுப்பினர்களை சாதி ரீதியாக பழி வாங்கும் விதமாக செயல்படுவதாகவும்,பணம் பெற்றுக்கொண்டு வழி தடங்களை வழங்குவதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்து 50கும் மேற்பட்டவர்கள் ஆவடி பணிமனை வாயில் முன்னர் கண்டன பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு ஆர்பாட்டம் செய்தனர்.இதன் காரணமாக 20கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி அடைந்தனர்.இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் ஆர்ப்பாட்டம் கைவிட பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள் ஆளும்கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்த தங்களை மிகுந்த மன உளைச்சல் ஏற்படுத்துவதாக வேதனை தெரிவித்தனர்.மேலும் பட்டியலினத்தவர்களை வேண்டும் என்றே பழி வாங்கும் விதமாக பணி வழங்காமல் அலைகழிப்பதாக பகிர் குற்றசாட்டு கூறியுள்ளனர்.இதனால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு ராஜ்குமாரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.





Tags:    

Similar News