முகக்கவசம், கையுறை அணியாமல் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள்
ஆவடி காமராஜ் நகர் பகுதியில் முகக்கவசம், கையுறை இல்லாமல் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள்- அச்சத்தில் மக்கள்.
கொரோனா வைரஸ் இரண்டாம் நிலை அதிகமாக பரவி வரும் நிலையில், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் துப்புரவு தொழிலாளர்கள் முகக்கவசம், கையுறை அணியாமல் வேலை செய்து வருகிறார்கள்.
இதில் அவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆவடி மாநகராட்சி ஆணையாளர் இதற்கான நடவடிக்கை எடுப்பாரா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.