ஆவடி அருகே மளிகை கடையில் ரூ.4.18 லட்சம் பறிமுதல்
ஆவடி அருகே நாகம்மை நகரில் மளிகை கடையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக கூறி ரூ 4.18 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருமுல்லைவாயல் நாகம்மை நகரைச் சேர்ந்த பாலமுருகன். இவர் சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறார். அதிமுகவை சேர்ந்தவர் பாலமுருகன். மளிகை கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வாக்கு செலுத்த பணம் வினியோகம் செய்வதாக புகார் எழுந்தது.
புகாரின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மோகனரங்கன் தலைமையில் மளிகை கடையை ஆய்வு செய்தனர். அப்போது கடையில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்தது தெரியவந்தது.
இதனை அடுத்து மளிகை கடை உரிமையாளர் பாலமுருகனிடம் இருந்த ரூ. 4லட்சத்து 18 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.மேலும் இன்று காலையில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.