மின்வாரிய கோட்ட பொறியாளர் வீட்டில் கொள்ளை: இருவர் கைது

மின்வாரிய கோட்ட பொறியாளர் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-03-16 03:30 GMT

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த திருநின்றவூர் தென்றல் நகர் பகுதியில் வசித்து வருபவர்.மேதாஜி(53), இவர் ஆவடி அருகே மிட்டனமல்லி பகுதியில் இயங்கும் மின்வாரிய அலுவலகத்தில் கோட்ட பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 10 ஆம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு மைசூர் பகுதியில் உள்ள தன் உறவினர் வீட்டில் நடைபெற்ற திருமணத்திற்கு கலந்து கொள்ள சென்றுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யார் இல்லை என்று தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் கடந்த 13 ஆம் தேதி அன்று அதிகாலை வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டில் இருந்த பீரோவை உடைத்தபோது சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் கண்டதும் கொள்ளையடித்த தங்க நகை மற்றும் ரொக்க பணம் எடுத்துக்கொண்டு அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் மேதாஜி வீடு திரும்பி உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 17 சவரன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்க பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து இந்த சம்பவத்தை பற்றி மேதாஜி ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சென்னை மாங்காட்டை சேர்ந்த விக்னேஷ்(25), செனாய் நகர் சார்ந்த வினோத் குமார்(22) ஆகிய இருவரை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News