ஆவடியில் நாட்டு நல நலத்திட்ட பணிகள் குழுவின் சாலை விழிப்புணர்வு பேரணி
ஆவடி அருகே, திருநின்றவூர் பகுதியில் நாட்டு நலப்பணி, திட்ட குழு சார்பாக சாலை விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடிஅடுத்த திருநின்றவூர் மார்க்கெட் காந்தி சிலை அருகே நாட்டு நலப்பணி திட்டம் அலுவலர்கள் மணவாளன், எஸ்.ராதா அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டில் நாட்டு நலபணி திட்ட குழு மாணவ மாணவிகள் இணைந்து பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணிக்கு சிறப்பு அழைப்பாளராக ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோதண்டன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி திருநின்றவூர் காந்தி சிலையில் ஆரம்பித்து லட்சுமி திரையரங்கம் வழியாக நத்தமேடு, பாலவேடு பகுதியாக பாக்கம் கிராமம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது.
ஸ்ரீராம் கலை கல்லூரி மற்றும் நாட்டு நல பணி திட்ட மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகையை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும். சாலையில் பாதுகாப்பாக செல்ல வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது இரண்டுபேரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்றனர்.
இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் பி.முருகன் ஈ.சரவணன், செந்தில், பிரபு, செல்வி, மீமா கலந்துகொண்டனர். இந்த சாலையில் பாதுகாப்பிற்கு திருநின்றவூர் காவல்துறையும் ஆவடி போக்குவரத்து காவல் துறையினரும் ஆகியோர் உட்பட பலர் உடன் இருந்தனர்.