ஆவடி அருகே மன உளைச்சலில் வருவாய் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

ஆவடி அருகே மன உளைச்சலில் வருவாய் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-06-26 10:45 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பட்டாபிராம் அம்பேத்கர் பகுதியில் வசித்து வந்தவர் வருவாய் ஆய்வாளர் அருண்குமார். இவருக்கு திருமணமாகி மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அருண்குமார் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அருண்குமார் பதவி உயர்வு கிடைக்காததால் மற்றும் கடன் தொல்லையில் மன உளைச்சலில் இருந்த காரணத்தினால் இன்று காலை அவரது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தினர் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அறைக்கு சென்று பார்த்தபோது தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கூச்சலிட்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிந்து. விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News