மழையால் ரயில் சிக்னல் இயக்கம் பாதிப்பு : ரயில்கள் நிறுத்தம்..!

மழையால் பட்டாபிராம் ரயில் நிலையத்தில் ரயில் சிக்னல்கள் பழுதானது. இதனால் ரயில்கள் நிறுத்தப்பட்டன. பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Update: 2024-05-23 05:45 GMT

பட்டாபிராம் ரயில் நிலையம்.

ஆவடி அருகே ரயில் சிக்னல்கள் மழையின் காரணத்தால் பழுதானது. சிக்னல்  பழுதானதால் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால்  பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர். 

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த இந்துக்கல்லூரி- பட்டாபிராம் இடையே ரயில் சிக்னல் பழுதானது.  சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணத்தினால் ரயில் சிக்னல்கள் டவுன் ஆனதால் சென்னையில் இருந்து திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் செல்லும் ரயில்களும் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில்களும் பட்டாபிராம் இந்து கல்லூரி, ஆவடி போன்ற ரயில் நிலையங்களில் ஆங்காங்கே ஒன்றை மணி நேரத்திற்கு மேலாக ஆங்காங்கே  ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. 

இதனால்  ரயில் பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் சீர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறனர். இந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் கர்ப்பிணி பெண்கள் கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மார்கள் அவதி அடைந்தனர். 

எனவே பல்வேறு பகுதிகளில் பழுதாகி உள்ள ரயில்வே சிக்னல் லைட்டுகளை ரயில்வே நிர்வாகம் விரைந்து சீர் செய்ய வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News