சமுதாயத்தை இழிவாக பேசி சமூக வலைத்தளத்தில் பதிவு: காவல் நிலையத்தில் புகார்

யாதவ சமுதாயத்தை இழிவாக பேசி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவரை கைது செய்யக்கோரி திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-08 02:15 GMT

திருநின்றவூர் காவல் நிலையத்தில் பால் வியாபாரி தீனதயாளன் தலைமையில் 10 க்கும் மேற்பட்டோர் புகார் மனுவை அளித்தனர்.

சென்னை, ஆவடி அடுத்த திருநின்றவூர் காவல் நிலையத்தில் பால் வியாபாரி தீனதயாளன் தலைமையில் 10 க்கும் மேற்பட்டோர் புகார் மனுவை அளித்தனர்.

அதில் ராஜபாலா வேங்கை என்பவர் யாதவ சமுதாயத்தையும், பெண்களையும் இழிவாக பேசி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனால் சமூக ஒற்றுமைக்கு பாதகம் ஏற்படும் என்றும், எனவே அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் யாதவ சமுதாயத்தை இழிவாக சித்தரித்தாகக்கூறி தமிழகத்தில் பல இடங்களில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில சட்ட ஆலோசகர் சாந்தகுமார், சின்னதுரை, வசந்த், சரவணன், சேகர், விஜி, சதிஷ், சீனு திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

Tags:    

Similar News