ஆவடியில் ஒரு லட்சத்து 3ஆயிரம் ரூபாய் பணம் : பறக்கும் படையினர் பறிமுதல்

ஆவடியில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-04-02 15:08 GMT

தமிழகத்தில் வரும்  6 ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்த நிலையில் ஆவடி காமராஜர் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அங்கு வந்த கார் ஒன்றை சோதனை செய்தனர் அதில் ஒரு லட்சத்து மூன்றாயிரத்து ஐநூறு ரூபாய் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் காரில் வந்தவர் விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த சேவியர் ஸ்டீபன் சிங் என்பதும்,

இவர் ஒப்பந்த அடிப்படையில் கட்டடம் கட்டும் பணி செய்து வருவதாகவும் இதற்காக வாடிக்கையாளர்கள் ஒருவரிடம் பணம் பெற்று செல்லும்போது பிடிப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் சோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாததால் ஆவடி வட்டாட்சியர் செல்வம், பணத்தினை ஆவடி கருவூலத்தில் ஒப்படைத்தார். மேலும் உரிய ஆவணங்களை சமர்பித்து பணத்தினை பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News