முதன்முதலில் அமைச்சர் தொடங்கிய சாலை; ஒருநாள் மழைக்கே தாக்குப் பிடிக்காமல் சேதம்

திருமுல்லைவாயலில் தார்சலை ஒரு மணி நேரம் மழையில் கேக்கு துண்டுகளைப் போல பெயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-08-22 15:06 GMT

மழையால் சேதமடைந்த தார் சாலை.

சென்னை ஆவடி தொகுதிக்கு உட்பட்ட திருமுல்லைவாயில் சி.டி.எச் சாலையில் இருந்து அண்ணனூர் ரயில் நிலையம் 60அடி சாலை வரை ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

சாலை அமைக்கும் பணியினை கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி, திமுக அமைச்சர் நாசர் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார். தற்போது முழுமையாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஒருநாள் மழைக்கே தாக்கு பிடிக்காமல் அந்த சாலை கேக் துண்டுகளைப் போல பெயர்ந்து வந்தது. சட்டமன்ற உறுப்பினராக நாசர் பதவியேற்று முதன்முதலாக பூமி பூஜை செய்து தொடக்கி வைக்கப்பட்ட சாலை சேதமடைந்துள்ளதாக விமர்சனம் செய்யும் அப்பகுதி மக்கள், இனி வரும் காலங்களில் திமுக அரசால் கொண்டுவரப்பட மக்கள் பணிகள் எப்படி இருக்குமோ என்ற கவலை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News