ஆவடி மாநகராட்சிக்கு புதிய ஆணையர் பதவி ஏற்பு

ஆவடி மாநகராட்சியின் புதிய ஆணையராக அப்துல் ரஹ்மான் பதவி ஏற்றுக் கொண்டார்.

Update: 2023-10-19 09:30 GMT

ஆவடி மாநகராட்சியின் புதிய ஆணையராக அப்துல் ரஹ்மான் பதவி ஏற்றுக் கொண்டார்

ஆவடி மாநகராட்சியின் புதிய ஆணையராக ஷேக் அப்தூல் ரஹமான் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி நகராட்சி கடந்த 2019ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்த பட்டது.இதன் முதல் ஆணையராக ஜோதி குமார் என்பவர் நியமிக்கப்பட்டார்.இதனை தொடர்ந்து 6.கும் மேற்பட்ட நபர்கள் ஆணையர்களாக பணியாற்றினார். இந்த நிலையில் ஐஏஎஸ் மதிப்பிலான ஒருவரை நியமனம் செய்திட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை தொடர்ந்து முதல்  ஐஏஎஸ்  அந்தஸ்திலான ஆணையாளராக தர்ப்பகராஜ் கடந்த ஜூன் மாதம் நியமனம் செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் திடீரென அவர் உயர் கல்வி துறைக்கு மாற்ற பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையராக இருந்த ஷேக் அப்துல் ரஹமான் ஆவடி மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டார்.

இந்தநிலையில் அவர்  நேற்று அதிகாரப்பூர்வமாக ஆவடி மாநகராட்சியின் 8.வது மாநகராட்சி ஆணையராக பதவி ஏற்று கோப்புகளில் கையெழுத்து இட்டார்.புதியதாகநியமனம் செய்யப்பட்டுள்ள தனக்கு பல சவால்கள் உள்ளன.முதன்மையாக மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்தார்.




Tags:    

Similar News