அத்திப்பட்டு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த நிவாரண பொருட்களை வழங்கிய எம்எல்ஏ
அத்திப்பட்டு சென்னை மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் குட்னஸ் பவுண்டேஷன் மூலம் 60க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த நிவாரண பொருட்களை எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் வழங்கினார்.;
அத்திப்பட்டு குப்பத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க நிவாரண தொகுப்பை எம்எல்ஏ சாமுவேல் வழங்கினார்.
கொரோனா பரவல் காரணமாக அரசு மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் பலதரப்பட்ட ஏழை எளிய மக்கள் இதனால் கடும் இன்னல்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அயப்பாக்கத்தில் உள்ள குட்னஸ் பவுண்டேஷன் சார்பில் நிறுவனா் பவுல் ராஜா அவா்கள் மிகவும் நலிவடைந்த ஏழை எளிய குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நலத்திட்ட பொருட்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகிறனர்
பச்சைபயிறு ,கொண்டைகடலை, பாதாம், வேர்கடலை, பேரிச்சம்பழம், உலர் திராட்சை, 20க்கும் மேற்பட்ட நவதானியம் அடங்கிய சத்துமாவு பாக்கெட் பிஸ்கெட் அடங்கிய தொகுப்பை அத்திபட்டு பகுதியில் வசிக்கும் 60 க்கும் மேற்பட்ட குழந்தை களுக்கு இன்று எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அத்திப்பட்டு குப்பம் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு உட்டசத்து நிறைந்த உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்.