ஆவடி பகுதியில் புதிய மின்மாற்றியை திறந்து வைத்த அமைச்சர் நாசர்
ஆவடி பகுதியில் மக்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்மாற்றியை அமைச்சர் அமைச்சர் நாசர் இன்று திறந்து வைத்தார்.;
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவடி தெற்கு நகரின் 17வது வார்டு பகுதியில் நேற்று மாலை புதிய மின்மாற்றி திறந்து வைக்கப்பட்டது.
மசூதி தெரு பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக பால்வளத் துறை அமைச்சரும் திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் நேரில் சென்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில், ஆவடி தெற்கு நகரப்பகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன் மற்றும் பொறுப்புக் குழு உறுப்பினர், வார்டு கழகச் செயலாளர்கள் இளங்கோ மற்றும் வார்டு நிர்வாகிகள் மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.