திருவேற்காடு, அயப்பாக்கம் பகுதியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை, துவக்கி வைத்த அமைச்சர்
திருவேற்காடு மற்றும் அயப்பாக்கம் பகுதியில் இன்று இலவச ஆம்புலன்ஸ் சேவையை பால்வளத்துறை அமைச்சர் நாசர் துவக்கிவைத்தார்.;
பாஸ்கரன எக்ஸலண்ட் கொரியர் சர்வீஸ் மற்றும் ஏ டூ இசட் டிரஸ்ட் மூலமாக ரூ. 9.5லட்சம் மதிப்பில் புதிய ஆம்புலன்ஸ் சேவை மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.
இதனை தமிழக பால்வளத் துறை அமைச்சரும் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான ஆவடி சா.மு. நாசர் திருவேற்காடு நகர மற்றும் அயப்பாக்கம் ஊராட்சி பகுதியில் இன்று துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் திருவேற்காடு நகர செயலாளர் என். இ.கே. மூர்த்தி மற்றும் வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் துரை வீரமணி ஆகியோர்கள உடனிருந்தனர்.