கடை வியாபாரி மீது கொலை வெறித் தாக்குதல்: நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் மனு
கடை வியாபாரி மீது கொலை வெறித் தாக்குதல் சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் சங்கம் பேரவை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
ஆவடியில் வியாபாரியை உடலின் 27 இடங்களில் வெட்டிய மர்ம நபர்களை முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் பேரவை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது சென்னை பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியில் கஸ்தூரி பவானி என்கிற பெயரில் 15 ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி வரும் மகாராஜா என்பவர் உரிமையாளரிடம் சுமார் 6 மாதத்திற்கு முன்பு ஹோட்டலில் 6 பேர் கொண்ட கும்பல் உண்ணும் உணவிற்கு பணம் தராததால் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த 6 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டு வீசினர். பின்னர் 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அவர்களை நீதிமன்றம் ஆஜர்படுத்தி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். அதில் இருவரை மட்டும் சிறையிலிருந்து பிப்ரவரி 6 தேதி அன்று சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று 30 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர்.
ஹோட்டலின் உரிமையாளர் மாமூல் கொடுக்க மறுத்த நிலையில் கடை உரிமையாளரை மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுமார் 27 இடங்களில் உடலில் ஹோட்டல் உரிமையாளரை சரமாரியாக வெட்டி தப்பித்து உள்ளனர்.
தொடர்ந்து ஒவ்வொரு இடமும் இதுபோன்ற வியாபாரிகள் வெட்டுப்பட்டுவரும் நிலையில், இதனை கண்காணிக்க ஆவடி பெருநகர காவல் ஆணையர் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
மேலும் நேற்று ஆவடி ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை அருண்குமார் தலைமை ஒருங்கிணைப்பாளர் கேட்டபோது, வியாபாரியை கொலைவெறி நடத்தி தப்பித்துச் சென்ற 2 குற்றவாளிகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் வியாபாரிகளிடம் இதுபோன்ற பிரச்சினையில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை காவல்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.