கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

ஆவடி அருகே 6 வயதிற்கு மேற்பட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு;

Update: 2022-05-10 03:15 GMT

ஆவடி அருகே 6 வயதிற்கு மேற்பட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான இரண்டாம் ஆண்டு கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன

ஆவடி அருகே 6 வயதிற்கு மேற்பட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான இரண்டாம் ஆண்டு கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த ஜெயா கல்லூரி விளையாட்டு திடலில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.  இப்போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகளும் சான்றிதழ் வழங்கினார்.

இப்போட்டியில் 6 வயதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆவடி பட்டாபிராம் திருநின்றவூர் செவ்வாபேட்டை வெங்கம் பாக்கம், கசுவாமோரை, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை போன்ற பகுதிகளைச் சார்ந்த மாணவ மாணவிகள் கொண்டு  தங்களது திறமைகளை வெளிப்படுதினர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தொழில்நுட்ப இயக்குனர் விஜயராகவன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர் தியாகராஜன், சந்தோஷ் குமார் கராத்தே பயிற்சியாளர்கள் ரமேஷ் மற்றும் ராஜா,  மாணவ மாணவிகளில் பெற்றோர்களும் பயிற்சி ஆசிரியர்களும் கல்லூரி தாளாளர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News