ஆவடி அருகே வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் தங்க நகை ரொக்க பணம் கொள்ளை
ஆவடி அருகே வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் தங்க நகை. ரொக்க பணம் கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கோவில்பதாகை அசோக் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சிவகுமார் (50). அதே பகுதியில் உள்ள மத்திய அரசின் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். நேற்றிரவு சென்னை மூலக்கடையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார் சிவக்குமார்.
இன்று அதிகாலையில் குடும்பத்துடன் வீட்டுக்கு வந்தபோது. வீட்டின், பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் கதவை உடைத்து உள்ளே வைத்திருந்த 40 சவரன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு சிவகுமார் தகவல் கொடுத்தார்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைரேகை நிபுணர்களை வரவைத்து தடயங்களை சேகரித்து. விசாரணை நடத்தினர். பின்னர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்ப கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.