"புஜ பலம் பாரீர்" : ஆவடி தொகுதியில் உடற்பயிற்சி செய்த அமைச்சர்

ஆவடி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பாண்டியராஜன் உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று வாக்கு சேகரித்தார்.;

Update: 2021-03-30 06:16 GMT

ஆவடி தொகுதியில் போட்டியிடும்  அ.தி. மு.க. வேட்பாளர் அமைச்சர் பாண்டியராஜன், ஜிம்முக்கு சென்று வாக்கு  சேகரித்தார்.

ஆவடி தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான பாண்டியராஜன் அவருடைய தொகுதி  முழுவதும் சென்று முழு வீச்சில் வாக்கு  சேகரித்து வருகிறார். நேரடியாக வீடுகளுக்கு செல்கிறார்.  வீதி, வீதியாக சென்று அ.தி.மு.க. அரசின்  திட்டங்களை விளக்கி வாக்குகளை சேகரித்து வருகிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் அவர் தொகுதிக்கு  செய்த திட்டங்களை விவரிக்கிறார். அவர் தொகுதியில் இருக்கும் கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள்,  மக்கள் கூடும் பகுதிகளில்   இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து  வெற்றிபெறச் செய்யுமாறு கேட்கிறார். நேற்று காலை தென்றல் நகர் பகுதியிலும், கோபாலபுரம் பகுதியிலும்  வாக்கு சேகரித்தார். அங்குள்ள உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தார். பின்னர் அங்குள்ளவர்களிடமும் ஓட்டு கேட்டார்.



Tags:    

Similar News