நண்பர்களுக்குள் மனைவியை அபகரித்த தகராறு : ஆவடியில் இரட்டை கொலை
மனைவியை அபகரித்ததோடு தன்னை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்த நண்பனை கொலை செய்ய முயன்றதில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
தன்னை நிர்வாண படுத்தி விடியோவாக பதிவு செய்த ஜெகனை கொலை செய்ய முயன்றபோது ஜெகன் கூட்டாளி இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டனும் ஆவடியை சேர்ந்த ஜெகனும் சிறையில் நண்பர்களாகியுள்ளனர். நட்பு தொடர்ந்த நிலையில் ஜெகன், தனது நண்பர் மணிகண்டன் என்பவரின் மனைவியுடன் நெருக்கமாக பழங்கிவந்துள்ளார்.இதனை மணி பலமுறை கண்டித்துள்ளார். இதனை ஜெகன் பொருட்படுத்தவில்லை.
ஜெகன் மற்றும் அவனது கூட்டாளிகள் மணிகண்டனை அவனது வீட்டிலிருந்து ஆட்டோவில் கடத்தி நிர்வாணப்படுத்தி விடியோ பதிவுசெய்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். மேலும் அந்த வீடியோவை மணிகண்டனின் முன்னாள் மனைவிக்கு அனுப்பி அசிங்கப்படுத்தியுள்ளனர். இதனால் மணிகண்டன் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளார்.
தனது மனைவியை தன்னிடமிருந்து பிரித்தது,நிர்வாணப்படுத்தி விடியோ எடுத்தது என ஜெகன் மீது மிகுந்த ஆத்திரத்தில் மணிகண்டன் இருந்துள்ளார். தன்னை அவமானப்படுத்திய ஜெகனை கொலை செய்ய வேண்டும் என தனது தாயிடம் மணிகண்டன் கூறிவந்துள்ளார்.
இந்தநிலையில் சமாதானம் பேசவேண்டும் என மணிகண்டன்,ஜெகனை ஆவடி ஓ.சி.எப் மைதானத்திற்கு அழைத்துள்ளார். இதனை நம்பி ஜெகன் அவரது நண்பர்களுடன் அங்கு வந்துள்ளார். வியாசர்பாடியிலிருந்து அழைத்து வந்த சிலரை மணிகண்டன் ஏற்கனவே அங்கு தயார் நிலையில் வைத்திருந்தார்.
அவர்களுடன் சேர்ந்து ஜெகனை கொலை செய்ய முயன்றுள்ளனர். இதில் தப்பி ஓடிய ஜெகன் மற்றும் யாசின் தலைமறைவாகியுள்ளனர்.ஜெகனுடன் வந்த அசாருதின்,சுந்தர் ஆகியோர் மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளிகளிடம் சிக்கி முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் கொலை செய்த பின்னர் மணிகண்டன் தனது தாய்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தனது மகனை அவர்கள் பழி வாங்கிவிடுவார்கள் என அஞ்சிய மணிகண்டனின் தாய் காவல் துறையிடம் நடந்ததை கூறியுள்ளார். மணிகண்டனின் தாய் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் டேங்க் பேக்டரி போலீசார் மணிகண்டனை தேடி வருகின்றனர்.