சோழம்பேட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஆவடி நகராட்சி ஆணையர் ஆய்வு!

சோழம்பேடு பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்த ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன் ஆய்வு செய்தார்.

Update: 2021-05-25 08:23 GMT

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை  ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஆவடி மாநகராட்சி நிர்வாகம் சார்பாக பல்வேறு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோரின் ஆணைக்கிணங்க ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில், சோழம்பேடு பகுதியில் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதனை ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News