ஆவடி காய்கறி சந்தையில் அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு

ஆவடி காய்கறி சந்தையை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் திடீர் ஆய்வு செய்தார்.

Update: 2021-06-08 10:36 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காய்கறி சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நாசர்.

ஆவடி காய்கறி சந்தையை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் திடீரென ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கொரோனா  2ம் அலை காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக இருந்துவந்த முழு ஊரடங்கில்  நேற்றுமுதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அத்தியாவசிய தேவைக்கான கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க  அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆவடியில் 2வது நாளாக இன்று திறக்கப்பட்டுள்ள காய்கறி சந்தைகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திடீர்  ஆய்வு செய்தார்.

அப்போது முககவசம் அணியாத வியாபாரிகளை முக கவசம் அணிய வேண்டுகோள் விடுத்தார்.மேலும் வியாபாரிகளும் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்

Tags:    

Similar News