ஆவடி: கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்: வாகன ஓட்டிகள் அச்சம்!
ஆவடி அருகே விளம்பர பேனர் கிழிந்து தொங்குவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றுவருகின்றனர்.;
சென்னையை அடுத்த ஆவடி புதிய ராணுவ சாலை அருகே மிகப்பெரிய விளம்பரப் பலகை ஒன்று உள்ளது. தற்போது அந்த விளம்பர பலகை பலத்த காற்று காரணமாக கிழிந்து தொங்குகிறது. இந்த புதிய ராணுவ சாலையில் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனம் என 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த விளம்பர பேனர் உள்ள பகுதியை கடந்து செல்கின்றது.
ஏற்கனவே விளம்பர பேனர்கள் விழுந்து பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்பொழுது ஆவடி புதிய ராணுவ சாலை அருகே உள்ள இந்த பேனர் கிழிந்து தொங்குவதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனை ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து இதை சீரமைத்து விபத்தை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.