ஆவடி: இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் பிடிபட்டனர்
பட்டாபிராமில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ரவுடி கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை கைது செய்துள்ளனர்.
சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் உழைப்பாளர் நகரை சேர்ந்தவர் பிரசாந்த் கூலித் தொழிலாளியான இவர், அந்தப் பகுதியில் உள்ள இளைஞர்களுடன் மது போதையில் ஏற்பட்ட தகராறில் அவரை கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று மாலை 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பட்டாபிராம் பகுதி அஜித் மற்றும் பட்டாபிராம் அம்பேத்கர் நகரை சேர்ந்த முகேஷ், சாய் ஆதித்யா, வினோத், ஜூலி ஆகியோரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.