ஆவடி மாநகராட்சி கார் டிரைவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

ஆவடி மாநகராட்சி அதிகாரியின் கார் டிரைவர்கொரோனா தொற்றால் பாதிக்பப்ட்டு உயிரிழந்தார்.

Update: 2021-05-21 13:19 GMT

கார் டிரைவர் ராகவேந்திரா

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் பொறியாளரின் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் ராகவேந்திரா. இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் தனியார் ரத்தப் பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்து தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags:    

Similar News