ஆவடியில் பயிற்சி முடித்த 300 விமானப்படை வீரர்களுக்கு வழியனுப்பு விழா

ஆவடி மையத்தில் பயிற்சி முடித்த 300 விமானப்படை வீரர்கள் பணிக்கு செல்லும் வழியனுப்பு விழாநடைபெற்றது.

Update: 2021-08-01 15:53 GMT

பயிற்சி முடித்த வீரர்களை வழியனுப்பி வைக்கும் அதிகாரிகள்.

சென்னை அடுத்த ஆவடி விமான படை பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 300 வீரர்கள் பணிக்கு செல்லும் வழியனுப்பு விழா வீரர்களின் வீர சாகச நிகழ்ச்சியுடன் நடைபெற்றது.

சென்னை அடுத்த ஆவடியில் உள்ள விமான படை மையத்தில் ஆட்டோ மொபைல் பிட்டர் மற்றும் ஆட்டோ மொபைல் டெக்னிசியன், விமான போக்குவரத்து மெக்கானிக் பயிற்சி, விமான காவல் படை, பாதுகாவலர் பயிற்சி என பல்வேறு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 300 வீரர்கள் வெற்றிகரமாக பயிற்சி முடித்து பணிக்கு செல்கின்றனர்.

இங்கு அளிக்கப்பட்ட 24வார கால பயிற்சியில் மெக்கானிக்கல், பிட்டர் துறை சார்ந்த பல்வேறு பிரிவுகளில் கடும் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களை கவுரவித்து பரிசுகள் வழங்கி வழியனுப்பும் விழாவானது ஆவடி விமான படை தளத்தில் வீரர்களின் சாகச நிகழ்வுகளுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ஆவடி விமானப்படை மையத்தின் கமாண்டர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அனைத்து பிரிவுகளிலும் சிறந்து விளங்கி வீரர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கியதோடு சான்றுகளையும் வழங்கினார். குறிப்பாக வீரர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியில் நின்று பாதுகாப்பாக அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News