மாதனூர் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

மாதனூரில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்;

Update: 2021-05-27 06:45 GMT

மாதனூர் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி தற்பொழுது போடப்பட்டு வருகின்றன.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைச்சர் துரைமுருகன் மற்றும்  அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்கள்.

இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்கள் க.தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் என பலரும் உடனிருந்தனர்

Tags:    

Similar News