ஆம்பூர் அருகே ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

ஆம்பூர் அருகே ஆம்புலன்ஸில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது.;

Update: 2023-11-26 08:00 GMT

ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை.

ஆம்பூர் அருகே ஆம்புலன்ஸில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த பனங்காட்டேரி மலை கிராமத்தைச் சார்ந்த சுப்பிரமணி (38). இவர் கூலி தொழிலாளி. இவருடைய மனைவி விஜயா இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. மேலும் விஜயாவிற்கு ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது.

பின்னர் உடனே சுப்பிரமணி 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளார். இந்நிலையில் மழை காரணமாக பனங்காட்டேரியின் மழை பாதை மிகவும் பழுதடைந்து இருந்தது. இருப்பினும் 108 ஆம்புலன்ஸ் 9 மணிக்குள் சென்றடைந்தது அங்கு பிரசவ வலியால் அவதிப்பட்டு இருந்த விஜயாவை அழைத்துக் கொண்டு ஆம்பூர் அரசு மருத்துவமனை விரைந்தனர்.

இந்நிலையில் விஜயாவிற்கு பிரசவ வலி அதிகரித்தது. உடனே 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர் முகமது இஸ்மாயில் நடுக்காட்டில் ஆம்புலன்ஸை நிறுத்தி சுகப்பிரசவம் பார்த்தார். இதில் அவர்களுக்கு ஆரோக்கியமான நிலையில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளன.

Tags:    

Similar News