வனப் பகுதியில் கனிமவள கொள்ளை: 5 லாரிகள், பொக்லைன் இயந்திரம் பறிமுதல்
வனப் பகுதியில் கனிமவள கொள்ளையில் ஈடுபட்ட 5 லாரிகள், பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூா் அருகே வடபுதுப்பட்டு மூலக்கொல்லை பகுதியில் வருவாய் துறை மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் கடந்த சில வாரங்களாக மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் மண் தோண்டி எடுத்து லாரிகள் மூலம் கடத்தப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
மேலும் கனிம வள கொள்ளையில் ஈடுபட்ட லாரிகள் சென்று வருவதால் கானாற்றில் குடிநீருக்காக பதிக்கப்பட்ட குழாய்களும், ஆழ்துளை கிணறுகளும் சேதமடைந்து வந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். மேலும் கனிமவள கொள்ளையில் ஈடுபட்டவா்களையும் பொதுமக்கள் எச்சரித்தனா். எந்தவித தீா்வும் எட்டப்படாததால் பொதுமக்கள் திரண்டு சென்று லாரிகள், பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்தனா்.
தகவல் அறிந்து வருவாய், காவல் மற்றும் வனத்துறையினா் சென்று பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் 5 டிப்பா் லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
மணல், கஞ்சா உள்ளிட்ட சட்ட விரோதமான செயல் குறித்த குற்ற கலந்தாய்வுக் கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள மணல், கஞ்சா உள்ளிட்ட சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் சம்பந்தமான குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பள்ளிப்பட்டு கூட்டு சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் ஆலங்காயம் எஸ்.எப்.எஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஆனந்த் குமார்(32) என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.