ஆம்பூரில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் புகுந்த சாரைப் பாம்பு

ஆம்பூரில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் புகுந்த சாரைப் பாம்பை தீயணைப்புத்துறையினர் மீட்டு காப்பு காட்டில் விட்டனர்.;

Update: 2023-11-20 16:47 GMT

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ஏ-கஸ்பா சின்னக்கம்மார தெருவை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் ஆம்பூர் நகரில் உணவகங்கள், தேநீர் கடைகள் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் பின்புறம் உள்ள அறையில் ஓட்டல் மற்றும் தேனீர் கடைகளுக்கான சாமான்கள் பொருட்கள் இருப்பு வைத்துள்ளார்.

நேற்று மாலை அந்த அறைக்கு பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்ட அவரது குடும்பத்தினர் அலறி கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு மீட்பு படைத்துறையினருக்கும், ஆம்பூர் வனசரகர் பாபுவுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு பணித்துறை ஊழியர்கள் நான்கு பேர் மற்றும் வனக்காப்பாளர் பால்ராஜ் ஆகியோர் பாம்பை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர தேடலுக்குப் பிறகு சுமார் 6 அடி நீள சாரைப்பாம்பை பிடித்தனர். பின்னர் பிடிபட்ட அந்த பாம்பு சாணாங்குப்பம் காப்பு காட்டில் விடப்பட்டது.

அதேபோல் மற்றொரு இடத்தில் மலைப்பாம்பு பிடிப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி, பைரப்பள்ளி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், 9 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று மலை பம்பை பிடித்து, காப்பு காட்டில் விட்டனர்!

Tags:    

Similar News