ஆம்பூர் அருகே 2 வீடுகளில் 10 சவரன் நகை, பணம் கொள்ளை
ஆம்பூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.;
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவர், விவசாயம் செய்து வருகிறார். தனது நிலத்திற்கு சென்றுவிட்டு, வீடு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 10 சவரன் தங்க நகை, 7 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை போயுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணேசன், ஆம்பூர் கிராம காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவர் வீட்டிலும் பணம் கொள்ளை போயுள்ளது. அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். குமார் கொடுத்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து 2 வீடுகளில் பட்டப்பகலில் கொள்ளை போய் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.