நெல்லையில் ரேஷன் அரிசி கடத்திய மூன்று பேர் கைது; வாகனம் பறிமுதல்

மாட்டு தீவனங்களுக்காக கள்ளச் சந்தையில் விற்பனைக்கு கடத்த முயன்ற 1800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-08-21 15:11 GMT

நெல்லை டவுனில் 1800 கிலோ ரேஷன் அரிசி கட் மூன்று பேர் கைது. குற்ற புலனாய்வு துறை நடவடிக்கை.

நெல்லை மாவட்டம் நெல்லை டவுன் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் டவுன் வழுக்கோடை அருகே தென்காசி சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது TN 76 AM 0070 அசோக் லேலண்ட் தோஸ்த் என்ற வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரிய வந்தது.

பின்னர் போலீசார் நடத்திய சோதனையில் அந்த வாகனத்தில் மொத்தம் 45 சாக்கு மூட்டைகளில் 1800 கிலோ ரேஷன் அரிசி கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து வாகனத்தை ஓட்டிவந்த கீழக்கலங்கலை சேர்ந்த மகேந்திரன்(28), அவருடன் வந்த டவுனை சேர்ந்த சக்திவேல்(23) மற்றும் வாகனத்தின் உரிமையாளரான டவுனை சேர்ந்த மகாராஜன்(32) ஆகிய மூன்று பேரை நெல்லை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை ஆய்வாளர் தில்லை நாகராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நெல்லை, டவுண், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக ரேசன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து நெல்லை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாட்டுத் தீவனங்களுக்காக கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து வாகனம் மற்றும் 1800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News