தச்சநல்லூர் ஸ்ரீ சந்திமறித்தம்மன் கோவில் பங்குனி மாத திருவிளக்கு பூஜை

தச்சநல்லூரில் உள்ள ஸ்ரீ சந்திமறித்தம்மன் திருக்கோவில் பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு 2007 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2022-03-16 01:15 GMT
குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள். 

திருநெல்வேலி மாநகாில், தச்சநல்லூா் அருள்தரும் ஸ்ரீ சந்திமறித்தம்மன் திருக்கோவில் பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு 2007 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விளக்கு பூஜையில் பங்கேற்கும் பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு பூஜைக்கு தேவையான அகல் விளக்கு, திாி, எண்ணெய், வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமம், மாங்கல்யசரடு மற்றும் புஷ்பம் வழங்கப்பட்டது. 

திருக்கோவிலில் மூலஸ்தானத்தில்,  லட்சுமி வராகமூர்த்தி அலங்காரமும், விழா பந்தலில் பூரண புஷ்கலா சமேத தர்மசாஸ்தா திருக்கல்யாணக் கோலம் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.  மேலும் விநாயகர், சுவாமி ஐயப்பன் மற்றும் உற்சவர் தந்தி மரியம்மன் ஆகியோரும் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.

பக்தர்கள் குங்குமத்தாலும், பூக்களாலும் அா்ச்சனை செய்து விளக்கு பூஜை செய்தனா். விளக்கு பூஜையை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்நிகழ்ச்சியை கலந்துகொண்டு வணங்கி அம்மன் அருள் பெற்று சென்றனா். விழா ஏற்பாடுகளை தச்சநல்லூர் ஸ்ரீஜோதி வழிபாட்டு ஐயப்ப பக்தா்கள் செய்திருந்தனா்.

Tags:    

Similar News